தேசிய விடுமுறை தினமான அக்டோபர் 2ஆம் தேதியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது கட்டாயம். அவ்வாறு விடுமுறை வழங்காவிட்டால் இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
அக்டோபர் 2 விதிமுறையை மீறி செயல்பட்ட கடைகள், உணவகங்கள் மீது நடவடிக்கை! - action taken against shops and hotel regarding labour leave issue in kanyakumari
கன்னியாகுமரி: அக்டோபர் 2ஆம் தேதி விதிமுறையை மீறி செயல்பட்ட 25 கடைகள், 9 உணவகங்கள் மீது தொழிலாளர் நலத்துறையின் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![அக்டோபர் 2 விதிமுறையை மீறி செயல்பட்ட கடைகள், உணவகங்கள் மீது நடவடிக்கை! ab](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:51:47:1601817707-tn-knk-03-labour-welfare-action-image-7203868-04102020164727-0410f-1601810247-495.jpg)
ab
எனவே, இதுகுறித்து நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் ஞான சம்பந்தன் தலைமையில் மார்த்தாண்டம், திங்கள்சந்தை ,தக்கலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, விதிமுறைகளை மீறி செயல்பட்ட 25 கடைகள் மற்றும் நிறுவனங்கள், மற்றும் 9 உணவகங்கள் மீது தொழிலாளர் நலத்துறையின் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தனர்.