தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் அதிமுக கட்சி ஆரம்பித்து 48 ஆண்டுகள் ஆகின்றன. இதனை தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். குமரி மாவட்டம் வந்த கைத்தறி அமைச்சர் ஓஎஸ் மணியன் வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வடசேரி, வஞ்சி ஆதித்தன் புதுத் தெருவில் உள்ள கைத்தறி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
'அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கை கோட்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறுகிறார்கள். அது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.
Action against Seaman, சீமான் மீது நடவடிக்கை, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி O.S.Maniyan, 100% கைத்தறி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கைத்தறி துணிகள் தேக்கநிலையில் இல்லை. கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
சீமான் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, சீமானை வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொய் வாக்குறுதிகளை கூறி வாக்குகள் பெற்றது. இடைத்தேர்தலில் பொய் வாக்குறுதிகள் கூறமுடியவில்லை. நாகரிக அரசியலுக்கு சொந்தக்காரர்களான திமுக, அநாகரிக அரசியல் நடப்பதாகக் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது’ என்று கூறினார்.
இதையும் படிங்க: அலங்கார் தியேட்டரில் விசில் பறக்கும்: தலைவன் நினைவுநாள்