தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல தனியார் கிளினிக்கில் ஏசி வெடித்து தீ விபத்து - கன்னியாகுமரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வடசேரி

கன்னியாகுமரி: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அடுத்துள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் கிளினிக்கில் ஏசி வெடித்து தீ விபத்து. நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவுமில்லை.

ஏசி வெடித்து தீ விபத்து

By

Published : Nov 13, 2019, 10:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தை அடுத்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி அருகில் தனியாருக்கு சொந்தமான கிளினிக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாலை 6 மணிக்கு மேல்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இந்நிலையில் இந்த கிளினிக்கிலிருந்து மாலை திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து புகை மூட்டத்துடன் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் சாலையில் சென்ற கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிளினிக்கின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை போராடி அணைத்தனர்.இதில் ஏசிக்கான சுவிட்சை ஆப் செய்யாமல் சென்றதால் ஏசி ஓவர் லோடு ஆகி வெடிவிபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏசி வெடித்து தீ விபத்து நடந்த தனியார் கிளினிக்

மாலை 6 மணிக்கு மேல்தான் கிளினிக் திறக்கப்படும் என்பதால் இந்த விபத்தின் போது அங்கு யாருமில்லை. இதனால் மிகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ஏசி, டிவி, இருக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட பல லட்ச ரூபாய் பொருள்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:

திடீரென வெடித்துச் சிதறிய டிவி: அலறியடித்து ஓடிய பெண்!

ABOUT THE AUTHOR

...view details