தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் நிறுவனத்தில் மேனேஜர் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த ஆவின் அலுவலர்! - Aavin company

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த ஆவின் இளநிலைச்செயலாளர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஆவின் அலுவலர் - எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஆவின் அலுவலர் - எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்!

By

Published : Jul 26, 2022, 9:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், “நான் பேயோடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருவதால், நாகர்கோவில் மாவட்ட ஆவின் நிறுவனத்திற்கு அடிக்கடி கூட்டுறவு சங்க விஷயங்களுக்கு வந்து செல்வது வழக்கம்.

அந்த அடிப்படையில் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இளநிலை செயலாளராகப் பணியாற்றி வந்த ஐயப்பன், சரஸ்வதி, சகாயம் மற்றும் பழனி ஆகியோர் கூட்டாக சேர்ந்து, புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பணியிடம் காலியாக இருக்கிறது என்றும், அதை தன் பையனுக்கு வாங்கித்தருவதாகவும் உறுதி அளித்து 30 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி பேட்டி

ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. அதேநேரம் பணத்தை திருப்பிக்கேட்டால் தர முடியாது என மிரட்டுகிறார்கள். இது சம்பந்தமாக மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஐயப்பன், அவருடன் வேலை பார்த்து வரும் சரஸ்வதி, சகாயம், பழனி ஆகிய நான்கு பேர்கள் மீது புகார் கொடுத்துள்ளேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கருப்பட்டியை பயன்படுத்தி ஆவினில் சுவையான இனிப்பு

ABOUT THE AUTHOR

...view details