மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து, மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி! - kanyakumari news
கன்னியாகுமரி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி பூங்கா முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி! ஆம் ஆத்மி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9920346-thumbnail-3x2-fasf.jpg)
ஆம் ஆத்மி
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "மத்திய அரசு நாட்டு மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது.
டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். நாளை பொது மக்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதன் தொடக்கம்தான் இந்த விவசாய போராட்டம்" எனத் தெரிவித்தனர்.