கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் களப பூஜை நடைபெறுவது வழக்கம். இது தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் ஆடி திருவிழா!
கன்னியாகுமரி: தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில், ஆடி களப பூஜை வெகு விமரிசையாக இன்று தொடங்கியது.
pooja
இந்த ஆண்டின், ஆடி களப பூஜை வெகு விமரிசையாக இன்று தொடங்கியது. இதனையொட்டி திருவாவடுதுறை ஆதீன மடத்தில் உள்ள சுவாமிநாத ஆதினம் தங்கக்குடத்தில் சந்தனம், களபம், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, போன்ற வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி கலச பிறையில் வைத்து பூஜைகள் நடைபெற்றன.
கலவை நிரப்பப்பட்ட அந்த தங்க குடத்தை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.