ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று புண்ணிய நதிகள், கடல்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். அதேபோல கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு தர்ப்பணம் நிகழ்வு நடைபெறும். அந்நாளில் குமரி கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை தர்ப்பண நிகழ்வுக்கு தடை
கன்னியாகுமரி: லட்சக்கணக்கான மக்கள் கூடும் ஆடி அமாவாசை தர்ப்பண நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தடை விதித்துள்ளார்.
aadi-amavasai-banned-
இந்த நிலையில் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை தர்ப்பண நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தடைவிதித்துள்ளார். அதேபோல் குழித்துறை, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் தர்ப்பணம் செய்ய அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ராமநாதபுரம் புண்ணியத் தலங்களில் ஆடி அமாவாசை தினத்தன்று மக்கள் கூடத் தடை!