கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் தொழில் போட்டியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதேப்பகுதியை சேர்ந்த வினிஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஆக.5ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், மற்றோரு வழக்குகாக மீண்டும் கைது செய்யப்பட்டார். பூதப்பாண்டி போலீசார் வேண்டுமென்றே இப்படி செய்வதாக வினிஷ் உறவினர்கள் பூதப்பாண்டி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து வினிஷ் வெளியானார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் அலைக்கழித்ததாக இளைஞர் தற்கொலை
கன்னியாகுமரியில் போலீசார் அலைக்கழித்ததாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பூதப்பாண்டி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவரது உறவினர்கள் காவல்துறையின் அலைக்கழிப்பினாலேயே வினிஷ் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் விசாரனை என்ற பெயரில் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்து அலைகழிப்பதாக பூதப்பாண்டி காவல் ஆய்வாளருக்கு வினிஷ் கடந்த 23ஆம் தேதி புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து வழக்கில் மாநில அரசுக்கு நோட்டீஸ்