கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தனது தங்கையை பார்க்க திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த மகராசி(22) என்ற இளம்பெண் தனது தந்தை ஜெயபாலுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது ஆரல்வாய்மொழியில் உள்ள டீக்கடை ஒன்றில் சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடித்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் வாகனத்தை எடுக்க நடந்து சென்ற போது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை மகராசி, ஜெயபால் மீது மோதியது. இந்த விபத்தில் மகராசி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.