தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபாச வீடியோ புகாரில் பாதிரியார் ஆன்றோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! - kumari benedict anto

குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக் ஆன்றோவை, நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் திங்கட்கிழமை மாலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு சென்று, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 21, 2023, 8:04 AM IST

பாலியல் லீலை பாதிரியார் பெனடிக் ஆன்றோ: 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு

கன்னியாகுமரி:களியக்காவிளை பாத்திமா நகரை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ. இவர் தக்கலை அருகே பிலாங்காலை புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இவர் தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்கள் சிலரிடம் ஆபாச படங்கள், ஆபாச வாட்ஸ் அப் சாட்கள், ஆபாச வீடியோக்கள் பரிமாற்றம் போன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இது சம்பந்தமான ஆபாசப் படங்களும் இணையத்தில் வைரலாகி வெளிவந்தது. இந்நிலையில் குமரியை சேர்ந்த 18 வயதான இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது வழக்குப் பதிவு செய்தனர். சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான பாதிரியாரை இரண்டு தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

பாதிரியார் பயன்படுத்திய செல்போன் நம்பர் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களின் செல்போன் எண்களையும் தனிப்படை போலீசார் கண்காணித்து வந்த நிலையில், நாகர்கோவில் வழியாக பாதிரியார் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், திங்கட்கிழமை காலை நாகர்கோவில் பால்பண்ணை அருகே காரில் சென்று கொண்டிருந்த பாதிரியாரை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், நாகர்கோவில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் நாள் முழுவதும் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாலையில் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் பாதிரியார் பெனடிக் ஆன்றோ ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் - 2 நீதிபதி தாயுமானவன், பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜினோவிற்கும், தற்போது பாலியல் புகாரில் சிக்கி நாகர்கோவில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக் ஆன்றோவிற்கும் ஏற்பட்ட தகராறில் பல திடுக்கிடும் தகவல்கள் பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பாதிரியார் பெனடிக் ஆன்றோ போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆஸ்டினை கைது செய்த நிலையில், தனது மகன் நிரபராதி என்றும் பாதிரியார் செய்து வந்த தேவாலயத்திற்கு வருகிற பல இளம்பெண்களுக்கு பாதிரியார் பெனடிக் ஆன்றோ செய்த ஆபாச வாட்ஸ் அப் சாட்கள், ஆபாச வீடியோக்கள் உள்ளிட்ட பாலியல் லீலைகள் குறித்து ஆதரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாகவே இளம்பெண் ஒருவரும் பாதிரியார் மீது போலீசாரிடம் புகார் அளித்திருந்த நிலையில், தலைமறைவாகிய பாதிரியார் பெனடிக் ஆன்றோவை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது' - ஈபிஎஸ் விமர்சனத்திற்கு CM பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details