கன்னியாகுமரி:நாகர்கோவிலில் உள்ள பிரதான சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, ஒரு இளைஞர் அப்பெண்ணை பின்னால் தொடர்ந்து வந்துள்ளார். அந்த இளைஞர் தனது செல்போனில் இருந்த ஆபாச புகைப்படத்தினை காட்டி, பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முற்பட்டதாக தெரிகிறது.
நடுரோட்டில் சில்மிஷம் - இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் - kanyakumari
நாகர்கோவிலில் செல்போனில் ஆபாச படத்தினை காட்டி இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற வாலிபரை, பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற வாலிபர்
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஆத்திரத்தில் கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குடிகார கணவனின் கொடுமை தாங்காமல் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்த கர்ப்பிணி பெண்!!