தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிய சாஃப்ட் கிரிக்கெட் போட்டியில் வென்ற வீராங்கனைகளுக்கு குமரியில் உற்சாக வரவேற்பு! - kanniyakumari women players

நேபாள நாட்டில் நடைபெற்ற தெற்கு ஆசிய சாஃப்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய, கன்னியாகுமரி மாவட்ட வீராங்கனைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆசிய சாஃப்ட் கிரிக்கெட் போட்டியில் வென்ற வீராங்கனைகளுக்கு குமரியில் உற்சாக வரவேற்பு!
ஆசிய சாஃப்ட் கிரிக்கெட் போட்டியில் வென்ற வீராங்கனைகளுக்கு குமரியில் உற்சாக வரவேற்பு!

By

Published : Jul 7, 2022, 5:47 PM IST

கன்னியாகுமரி:நேபாள நாட்டில் கடந்த ஜூன் மாதம் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்தோனேசியா, இந்தியா மற்றும் நேபாள நாட்டு அணிகள் கலந்து கொண்ட ‘தெற்கு ஆசியா சாஃப்ட் கிரிக்கெட் போட்டி’ நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. மேலும் அந்த அணியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

ஆசிய சாஃப்ட் கிரிக்கெட் போட்டியில் வென்ற வீராங்கனைகளுக்கு குமரியில் உற்சாக வரவேற்பு!

இந்நிலையில் இவர்கள் அனைவரும் வெற்றிக்கோப்பையுடன் சொந்த ஊர் திரும்பினார்கள். குழித்துறை இரயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளுக்கு, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பொன்னாடை போர்த்தியும், பூச்செண்டுகள் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்கிய பயிற்சியாளர்களுக்கும் மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க:இளம் வீராங்கனைக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான சைக்கிள் வாங்கி கொடுத்த எ.ம்பி. கனிமொழி...

ABOUT THE AUTHOR

...view details