தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் நடந்த நீச்சள் போட்டி - 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு - மாவட்ட நீர் விளையாட்டு கழகம்

தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தயார் செய்யும் பொருட்டு நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் 70 பள்ளிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்ற நீச்சல் போட்டிகள் நடைபெற்றது.

தேசிய நீச்சல் போட்டிக்கு தயாராக 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நீச்சல் போட்டி
தேசிய நீச்சல் போட்டிக்கு தயாராக 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நீச்சல் போட்டி

By

Published : Nov 12, 2022, 9:09 PM IST

கன்னியாகுமரி: நீர் விளையாட்டு கழகம் சார்பில் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு கன்னியாகுமரி மாவட்ட மாணவ மாணவியரை தயார் செய்யும் பொருட்டு ஆண்டுதோறும் மாவட்ட நீர் விளையாட்டு கழகத்தின் சார்பில் நீச்சல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதை ஒட்டி இந்த ஆண்டு நீச்சல் போட்டி நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்ட முழுவதும் உள்ள 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

6 வயது முதல் 12 வயது வரையிலான மாணவ மாணவியருக்கு தனித்தனியே ஏழு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய நீச்சல் போட்டிக்கு தயாராக 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நீச்சல் போட்டி

இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உரிய ஊதியம் தரவில்லை: ரப்பர் கழகத்துக்கு எதிராக திரண்ட தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details