கன்னியாகுமரி: 'மெட்ராஸ் மாகாணம்' என்று இருந்த மாநிலத்தை 'தமிழ்நாடு' எனப்பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்ட நாள், 'தமிழ்நாடு திருநாளாக' இன்று (ஜூலை18) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அடுத்துள்ள இலந்தவிளை அருகே உள்ள கடற்கரையில் புத்தளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது.
'தமிழ்நாடு திருநாள்' தினத்தையொட்டி குமரி கடற்கரையில் மணல் சிற்பம்!
தமிழ்நாடு திருநாள் தினத்தையொட்டி, இன்று கன்னியாகுமரி அருகே உள்ள கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு திருநாள் தினம் கொண்டாடும் வகையில்- கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்..!
'தமிழ்நாடு திருநாள்' என தமிழ்நாடு உடைய வரைபடம் மற்றும் அதனை அறிவிப்பதற்கு முயற்சி எடுத்த அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆகியோருடைய உருவங்களுடன் மணல் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவர்கள் ஏராளமானோர் வந்து கண்டுகளித்துச்செல்கின்றனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காவல்துறையின் மெத்தனமே காரணம் - வேல்முருகன்
Last Updated : Jul 18, 2022, 7:29 PM IST