கன்னியாகுமரி மாவட்டம் ஆறுதேசம் பகுதியில் ராஜேஷ் என்பவர்கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கரோனா பணிக்காக ஆறுதேசம் பகுதிக்குட்பட்ட ஆலங்கோடு என்ற இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒருவர் ராஜேஷிடம் தகாத வார்த்தை பேசி அவரை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராஜேஷ், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ராணுவ வீரர்: நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு - கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ராணுவ வீரர்
கன்னியாகுமரி: கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியர் அலுலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
vao
இதுகுறித்து நித்திரவிளை காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினரின் விசாரணையில் குடிபோதையில் இருந்தவர் பெயர் மணிகண்டன் என்பதும், அவர் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை. இதனால் மணிகண்டனை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஆகியோரை சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில்மனு அளிக்கப்பட்டது.