தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி - ஆர்வமுடன் பெற்ற பயனாளிகள் - A show of priceless chicks at Kanyakumari

கன்னியாகுமரி: தென்தாமரைக்குளத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விலையில்லா கோழிக்குஞ்சியை வழங்கும் காட்சி
விலையில்லா கோழிக்குஞ்சியை வழங்கும் காட்சி

By

Published : Mar 12, 2020, 3:53 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் கால்நடை மருந்தகம் சார்பில், கோழிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விலையில்லா கோழிக்குஞ்சுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தென்தாமரைக்குளம் தாமரைப்பதி அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தாமரை தினேஷ் தலைமை வகித்து விலையில்லா கோழிக்குஞ்சுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர், முன்னாள் இன்னாள் ஊராட்சித்தலைவர்கள், கால்நடை ஆய்வாளர், கால்நடை உதவியாளர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விலையில்லா கோழிக்குஞ்சுகளை வழங்கும் காட்சி

இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவர் ஆசீர் எட்வின் கூறியதாவது, 'தென்தாமரைக்குளம் பேரூராட்சி, சுவாமிதோப்பு ஊராட்சி, கரும்பாட்டூர் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்த விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் பயனாளிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிகள் கொடுக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க:தண்டியாத்திரை நாணய நூல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details