கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கணியாகுளம் பாறையடியைச் சேர்ந்த மனநலம் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த இருவாரமாக சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
செவிலியர், மருத்துவரை ஆபாசமாகப் பேசியவர் கைது! - செவிலியர், மருத்துவரிடம் ஆபாச வார்த்தைகள் பேசி தகராறு
கன்னியாகுமரி: நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர், மருத்துவரை ஆபாசமாகப் பேசி தகராறில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
arrest
மருத்துவ மனையிலிருந்து இன்று(ஏப்.22) அந்த பெண்ணை 'டிஸ்சார்ஜ்' செய்யும்போது, செவிலியர், மருத்துவரை அதே ஊரைச் சேர்ந்த ஜெயசெல்வன் (47) என்பவர் ஆபாசமாகப் பேசியதோடு, தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், ஆசாரிபள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஜெயசெல்வனை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.