தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

418 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் திருவட்டார் கோயில் கும்பாபிஷேகம் - குமரியில் உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரியில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, நாளை (ஜூலை 6) உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

418ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவிருக்கும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம்
418ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவிருக்கும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம்

By

Published : Jul 5, 2022, 8:42 AM IST

கன்னியாகுமரி : 108 வைணவ தளங்களில் ஒன்றாக கருதப்படும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு, நாளை (ஜூலை 6) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கேரளா - தமிழ்நாட்டில் இருந்து அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆலயத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து, நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஐஜி பிரவேஷ்குமார் கூறுகையில், "திருவட்டார் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதையொட்டி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

418ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவிருக்கும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம்

பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் குமரி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும், கும்பாபிஷேகத்தையொட்டி, குமரி மாவட்டத்திற்கு நாளை (ஜூலை 6) உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்!

ABOUT THE AUTHOR

...view details