தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி சூரிய உதயத்தைக் காணக்கூடிய சுற்றுலாப்பயணிகள்... - Kanniyakumari

கன்னியாகுமரியில் வார விடுமுறை தினத்தையொட்டி, சூரிய உதயத்தைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 28, 2022, 12:36 PM IST

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். அதில் பண்டிகை காலங்கள், வார மற்றும் கோடை கால விடுமுறைகளில் வழக்கத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டினர் என ஏராளமானோர் கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தைக்காண குவிந்தனர். சூரியன் கடலில் இருந்து வெளியே வந்ததும் சூரிய உதயத்தைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர்.

அவர்கள் கடற்கரையில் நின்று செல்ஃபி மற்றும் போட்டோக்கள் எடுத்தும், கடலில் இறங்கி நீராடியும் மகிழ்ந்து வருகின்றனர். இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணிசங்கம கடற்கரையில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தெரிந்தது.

இன்று அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண கூடிய சுற்றுலாப்பயணிகளால் கன்னியாகுமரி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி சூரிய உதயத்தைக் காணக்கூடிய சுற்றுலாப்பயணிகள்...
இதையும் படிங்க:ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவருக்கு ஆணுறை டெலிவரி... ஸ்விக்கி பரிதாபங்கள்

ABOUT THE AUTHOR

...view details