கன்னியாகுமரி:மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், வாளையத்துவயல் பகுதிகளில் தனியாருக்குச்சொந்தமான எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு வாழை, ரப்பர், கிராம்பு போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்தப்பகுதிகளில் அடிக்கடி யானைகள் கூட்டமாக வந்து வாழை மரங்கள், ரப்பர், கிராம்பு செடிகள் போன்றவற்றை நாசப்படுத்திவிட்டுச்செல்கின்றன. இதனால் இந்த யானைகளை காட்டு பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.