கன்னியாகுமரி: குழித்துறை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் தக்கலை அடுத்த புலியூர்குறிச்சி பகுதியில் நர்சரி கார்டன் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜூன் 26ஆம் தேதி இரவு கார்டனில் உள்ள அலுவலக அறையில் ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
நர்சரி கார்டன் உரிமையாளரை தாக்கிய கும்பல் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கன்னியாகுமரியில் நர்சரி கார்டனுக்குள் புகுந்து கார்டன் உரிமையாளரை சரமாரியாக தாக்கி கும்பலை சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நர்சரி கார்டனுக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய கும்பல்- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...
அப்போது காரில் வந்திறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் கார்டனுக்குள் புகுந்து அலுவலகத்தில் இருந்த தர்மராஜ் மீது சரமாரியாக தாக்கியது. இதில் நிலை தடுமாறி அலுவலக அறையில் விழுந்த தர்மராஜ்ஜை மீண்டும் உள்ளே புகுந்து தாக்கி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதையும் படிங்க:கார்கள் மீது கனரக வாகனம் மோதி விபத்து: குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு