கன்னியாகுமரி: கீழமணக்குடியில் தேங்காய் கதம்பலில் இருந்து நாரைப் பிரித்தெடுக்கும் ஆலைகள் பல உள்ளன. இங்கு பிரித்தெடுக்கும் நார்கள் கயிறாகத் திரிக்கப்பட்டு, இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு முகிலன் குடியிருப்பைச்சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்குச்சொந்தமான நார் ஆலை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று இரவில் ஜெகநாதனுக்கு சொந்தமான நார் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ எரிய தொடங்கியது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் நார்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினரும் தென்தாமரைக்குளம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரியில் தேங்காய் நார் ஆலையில் தீ விபத்து... இதையும் படிங்க:வெளியானது ரஜினியின் ஜெயிலர் பர்ஸ்ட் லுக்