கன்னியாகுமரி: தோவாளை அடுத்த பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் உலகம்மாள். இவரது மகளுக்கு அண்மையில் திருமணமானது. தலைப் பொங்கலை முன்னிட்டு மகள் மற்றும் மருமகனுக்குப் பொங்கல் சீர் வழங்க உறவினர்கள் ஆறு பேருடன் காரில் சென்றுள்ளார். பூதப்பாண்டி அடுத்த தாழக்குடி சாலையில் கார் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் விபத்தில் உலகம்மாள் மற்றும் அவரது உறவினர் உமா என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற நான்கு பேர் படுகாயங்களுடன் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.