கன்னியாகுமரி: நாகர்கோவில் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஆண்டேஸ்வரன்(50). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சென்னையில் படித்து வருவதால், அவரை பார்க்க வாரம் ஒருமுறை ஆண்டேஸ்வரன் தனது மனைவி மற்றும் இளைய மகனுடன் சென்னை சென்று வருவது வழக்கம்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை காரில் சென்னை சென்ற நிலையில், வீட்டில் வளர்க்கும் நாயை பராமரிக்க அதே பகுதியை சார்ந்த ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இன்று இரவு நாய்க்கு உணவு வைக்க வரும் போது நாய் வீட்டினுள் நின்றுள்ளது. அதனால் சந்தேகமடைந்த அப்பெண், வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.