குமரியில் 70 % பேருந்துகள் இயக்கம் - Bus transport started at tamilnadu
குமரி மாவட்டத்தில் 70 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
குமரியில் 70% பேருந்துகள் இயக்கம்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் கரோனா அச்சம் குறைந்து, உற்சாகத்துடன் பேருந்துகளில் பயணம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் 70 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் அனைத்து கிராம பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றன.