தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவை பொதுத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றன. இதையடுத்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்களுக்கு, 610 இடங்களில் 1,694 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி: 69.61 விழுக்காடு வாக்குப்பதிவு - TN ELECTION 2019
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற பொதுத்ததேரத்லில் 69.61 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதல் முறையாக தங்கள் ஓட்டினை பதிவு செய்யும் ஆர்வத்தில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 48 கடற்கரை கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் ஒரு சிலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடபெறாததால் பிரச்னை ஏற்பட்டது. மற்ற இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 69.61 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்தார். 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்களில் 10 லட்சத்து 39,ஆயிரத்து 704 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இது கடந்த தேர்தலை காட்டிலும் 1.92 சதவீத ஓட்டுகள் கூடுதலாகும்.