கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட கூட்டமாவிளை, காட்டுவிளை, கல்லாம்பொத்தை, குஞ்சூட்டுவிளை உள்பட ஏழு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 75 ஆண்டுகளாக இந்த கிராமங்களுக்கு செல்ல முறையான சாலை இல்லாததால் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியின்றி பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
75 ஆண்டுகளாக சாலை வசதிக்காக காத்திருக்கும் மக்கள் - Kanyakumari kaliyakkavilai
கன்னியாகுமரி: களியக்காவிளை அடுத்த அழகு கூட்டமாவிளை, காட்டுவிளை உட்பட ஏழு கிராம மக்கள் 75 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
![75 ஆண்டுகளாக சாலை வசதிக்காக காத்திருக்கும் மக்கள் 6 thousand](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8407095-504-8407095-1597361613220.jpg)
6 thousand
சில நாட்களுக்கு முன்னர் களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகம் மரக்கன்றுகளை நட்டு இருக்கும் பாதையையும் இல்லாமல் செய்துள்ளது. எனவே ஆபத்துக் காலங்களிலும், சுப காரியங்களுக்காக பொதுமக்கள் நகரப்பகுதிக்கு வர பெரும் சிரமம் அடைந்து வருவதால், உடனடியாக முறையான சாலை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Last Updated : Aug 14, 2020, 5:15 AM IST