தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொன்னதை செய்த ஸ்டாலின் - நன்றி தெரிவித்த வில்சன் குடும்பத்தினர்

கன்னியாகுமரி: களியக்காவிளை சோதனை சாவடியில் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சன் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 5 லட்சம் ரூபாயை முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் வில்சன் உறவினர்களிடம் வழங்கினர்.

dmk fund
dmk fund

By

Published : Jan 17, 2020, 10:17 PM IST

ஜனவரி 8ஆம் தேதி களியக்காவிளை சோதனை சாவடியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ் ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. வில்சன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் ஐந்து லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

வில்சன் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த திமுகவினர்

இந்நிலையில், அதற்கான காசோலையை இன்று திமுகவின் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், திமுக எம்எல்ஏக்கள் மனோ தங்கராஜ் ,ஆஸ்டின் ஆகியோர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கினர். உதவித்தொகையை பெற்றுக்கொண்ட வில்சன் குடும்பத்தினர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details