தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

40 லட்சத்துக்கு 3.5 கோடி ரூபாய் கட்டிய பின்னரும் மிரட்டும் கந்துவட்டிக்காரர்! - தேவரசம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்

தருமபுரி : 40 லட்சத்துக்கு 3.5 கோடி ரூபாய் வட்டி கட்டிய பின்னும் தொல்லைத் தரும் கந்துவட்டிக்காரரின் கொடுமையிலிருந்து காப்பாற்றக்கோரி தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருவர் மனு அளித்துள்ளார்.

40 Lakhs 3. 5 Crore Interest and Intimidation
40 லட்சத்துக்கு 3. 5 கோடி ரூபாய் வட்டி பின்னும் மிரட்டும் கந்துவட்டி கொடுமை!

By

Published : Mar 6, 2020, 9:25 AM IST

Updated : Mar 11, 2020, 10:11 AM IST

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அடுத்துள்ள தேவரசம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் என்பவரே தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அருளரசிடம் இந்தக் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்

அம்மனுவில், “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாசர் என்பவரிடம் 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். நான் பெற்ற கடனுக்காக வட்டியை தினமும் செலுத்தினேன். நாள் கணக்கில் 75 ஆயிரம் ரூபாய் 35 ஆயிரம் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் என நான்கு ஆண்டுகள் வட்டி செலுத்திவந்தேன். கடனாக வாங்கிய தொகையாக மூன்று கோடியே 50 லட்சம் வரை வட்டி கட்டியுள்ளேன்.

இந்நிலையில், நாசர், என்னிடமிருந்து 201 பவுன் தங்க நகைகள் வீட்டுப் பத்திரங்கள், வங்கிக் காசோலைகளைப் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல்விடுக்கிறார், எனவே எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு தந்து எங்கள் வீட்டுப் பத்திரங்களை மீட்டுத் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்தன், “தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் என் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன்.

எங்கள் வீட்டுக் குழந்தைகளின் பசிக்கு பால் வாங்கித்தரகூட எங்களிடம் பணம் இல்லை. பணம் கொடுக்காவிட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டல்விடுக்கிறார்கள். எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க : 'ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதியுங்க... இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியேறுகிறோம்'

Last Updated : Mar 11, 2020, 10:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details