கன்னியாகுமரி:திண்டுக்கல்லில் இருந்து சின்ன வெங்காயம் பாரம் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று (ஜன.21) அதிகாலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள களியங்காடு பகுதியை கடக்கும்போது அதிவேகமாக வந்த அந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்தது.
லாரி கவிழ்ந்து 4 புதிய ஆட்டோக்கள் சேதம்: சிசிடிவி துணையுடன் போலீசார் விசாரணை! - லாரி விபத்து சிசிடிவி காட்சிகள்
நாகர்கோவில் அருகே அதிவேகமாக வந்த லாரி கவிழ்ந்து 4 புதிய ஆட்டோக்கள் சேதமானது குறித்து, கண்காணிப்பு படக்கருவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி கவிழ்ந்து 4 புதிய ஆட்டோக்கள் சேதம்
இந்த விபத்தில் அந்தப் பகுதியில் உள்ள ஷோரூம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு புதிய ஆட்டோக்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த இரணியல் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 307 பேர் கைது!