குமரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பான்மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கண்டுபிடித்து அதனை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அம்மாவட்ட எஸ்பி ஸ்ரீ.நாத் இதற்காக தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நாகர்கோவில் அடுத்த சரக்கல்விளை பகுதியில் குட்கா வியாபாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, பான்மசாலாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.