தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் நகை பட்டறையை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை! - குமரியில் நகை பட்டறை

கன்னியாகுமரி: குமாரபுரம் பகுதியில் நகை பட்டறையை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ewl
jewl

By

Published : Sep 21, 2020, 3:13 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியில் பகவதி என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை அமைந்துள்ளது. இந்தப் பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், அங்கு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகைகளை பெட்டியோடு கடைக்கு வெளியே எடுத்துச் சென்று பெட்டியை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை கடைக்கு வந்த உரிமையாளர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொற்றிகோடு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மோப்பநாய் ஏஞ்சல் மற்றும் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் மூலம் கொள்ளையர்களின் விரல் ரேகை பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details