தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேங்காய்பட்டினத்தில் படகிலிருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - thenkaipatinam

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுக முகத்துவாரத்தில் படகிலிருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயமாகியுள்ளார்.

தேங்காய்பட்டினத்தில் 27 மீனவர்கள் பலியாகி இருந்த நிலையில் மேலும் ஒருவர் மாயம்
தேங்காய்பட்டினத்தில் 27 மீனவர்கள் பலியாகி இருந்த நிலையில் மேலும் ஒருவர் மாயம்

By

Published : Aug 30, 2022, 11:35 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட மீன் பிடி துறைமுகத்தின் கட்டுமான பணிகள் சரியில்லாத காரணத்தால், ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் மீனவர்கள் முகத்துவாரத்தில் விபத்தில் சிக்குகின்றனர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் முகத்துவார மணல் திட்டு வழியாக வரும் படகுகள் தூக்கு விசப்பட்டத்தில் இதுவரை 27 மீனவர்கள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, அரசு தரப்பில் சீரமைப்பு பணிகளும் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் இணையம் புத்தம் துறையை சேர்ந்த 67 வயதான அமல்ராஜ் என்ற மீனவர் நாட்டுப்படகில் மீன் பிடித்துவிட்டு நேற்று மாலை கரை திரும்பினார். அப்போது முகம் துவார மணல் திட்டில் படகு தூக்கி வீசப்பட்டத்தில் அமல்ராஜ் கடலில் மூழ்கினார். அவரைத் தேடும் பணியில் தேங்காய் பட்டினம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மனநிலை சரியில்லாதவர்களைக் கையாளும் வகையில் காவலர்களுக்குப் பயிற்சி தேவை... மனித உரிமைகள் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details