கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தாணுமாலையபெருமாள்.
இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோயில் பெருந்திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.
மதியம் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளதை கண்டு அதிச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 25 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்களும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளை போன வீட்டின் அருகே நெருக்கமாக வீடுகள் இருந்தும் பட்டப்பகலில் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டதால் உள்ளூரை சேர்ந்தவர்களின் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் கொள்ளை பட்டப்பகலில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து பணம் திருட்டு-திருடர்களுக்கு வலைவீச்சு