கன்னியாகுமரி:இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இன்று 2023ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை பார்க்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று (டிசம்பர் 31) முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்.
குமரியில் புத்தாண்டின் முதல் சூரிய உதய காட்சி - கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் 2023ஆம் ஆண்டின் முதல் சூரியன் உதய காட்சியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
2023ஆம் ஆண்டின் முதல் சூரிய உதய காட்சி
இன்று (ஜனவரி 1) காலையில் சூரிய உதயத்தை கடற்கரையில் அமர்ந்து பார்க்கும் கண்டு ரசித்தனர். பாதுக்காப்பு போலீசார் இல்லாததால் ஒரு சிலர் ஆபத்தான முறையில் கடற்கரை பாறைகளின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தனர். சூரிய உதயத்தை பார்த்த பின்னர் பெரும்பாலானோர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலிலும் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: New year 2023: புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்