கன்னியாகுமரி மாவட்டத்தில், பல இடங்களில் மறைமுக குடோன்களில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி மொத்த வியாபாரிகள் விற்பனை செய்துவந்துள்ளனர். இந்த மறைமுக குடோன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களாக தீவிர சோதனை நடத்திவந்தனர்.
இதன் முதல்கட்டமாக இந்துக் கல்லூரி அருகில் செயல்பட்ட குடோன் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், சரக்கல்விளை, வட்டவிளை ஆகிய பகுதிகளில் செயல்பட்ட ரகசிய குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.