சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், லாட்ஜுகள் செயல்பட்டு வருகின்றன. அதில் சில தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடத்திவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்
கன்னியாகுமரி: தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
kanniyakumari
அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கேரளப் பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:கொடைக்கானலில் பாலியல் தொழில்: 6 இளம்பெண்கள் மீட்பு