கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே மேல ஆசாரிப்பள்ளம் புனித மிக்கேல் ஆதிதூதர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா தொடங்கி நேற்று(அக்.01) ஒன்பதாவது நாள் திருவிழா நடைபெற்றது. இரவு தேர் பவனி தொடங்குவதற்கு முன்னதாக நடந்த வானவேடிக்கையின் போது பட்டாசு வெடித்ததில் அப்பகுதியில் பிரதான பக்தர்கள் நின்று வானவேடிக்கையைக் கண்டு களித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு பெட்டிகள் சரிந்து விழுந்ததில் அருகாமையிலிருந்த பக்தர்கள் மீது பட்டாசுகள் விழுந்தன. இதில் 2 பெண்கள் உட்பட 14 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
நாகர்கோவிலில் திருவிழாவில் பட்டாசு விபத்து... 14 பேர் படுகாயம்... - கன்னியாகுமரி
நாகர்கோவில் அருகே புனித மிக்கேல் ஆதி தூதர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
திருவிழாவில் பட்டாசு விபத்து
அதன்பின் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஐஏஎஸ் அதிகாரி மனைவியை ஆபாசமாக பேசியதாக கே.எஸ் அழகிரி உறவினர்கள் மீது வழக்குப்பதிவு