தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்! - nagercoil

கன்னியாகுமரி: கோவையிலிருந்து கேரளா சென்ற ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1200 கிலோ ரேசன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

By

Published : Aug 7, 2019, 8:21 AM IST

தமிழ்நாட்டில் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படும் ரேசன் பொருட்கள் அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தை ஒட்டிய குமரி மாவட்டத்திலிருந்தும் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.

1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

இந்நிலையில், இன்று கோவையிலிருந்து நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்ற ரயிலில் 48 மூடைகளில் 1200 கிலோ ரேசன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அப்போது, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் சோதனையில் இது சிக்கியது. பின்னர், ரேசன் அரிசியை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details