நாகர்கோவில் டெரிக் சந்திப்பு அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதற்காக, நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பள்ளத்தின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் அடுக்கை இடித்தபோது, அங்கு சுமார் 120 அடி ஆழமுள்ள கிணறு இருந்தது தெரியவந்தது. நட்ட நடு சாலையில் மறைந்திருந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறித்த தகவல் பரவியதும், அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் அங்குத் திரண்டனர்.
நகர சாலையின் நடுவே 120 அடி கிணறு..! - 120 FT WELL FOUND UNDER CITY ROAD
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டும் போது, சாலையில் 120 அடி ஆழ கிணறு கண்டறியப்பட்டது. இதை சிமெண்ட் அடுக்கை கொண்டு மூடிவிட்டு வேலையை தொடங்க இருந்தபோது, அலுவலர்களிடம் முழுவதுமாக கிணற்றை மூடிவிட்டு வேலையை தொடங்குமாறு பொதுமக்கள் வற்புறுத்தினர்.
உடனே கிணற்றை மீண்டும் அடுக்குகள் மூலம் மூடிவிட்டு, அங்கு பணியைத் தொடர ஊழியர்கள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிணற்றை மண் போட்டு மூடி பணியைத் தொடருமாறு வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட அலுவலர்கள், 120 அடி ஆழமுள்ள கிணற்றைப் பார்வையிட்டனர். இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘கிணற்றை தற்போது பழைய நிலையிலேயே மண்ணை நிரப்பி, அதன் மீது சிமெண்ட் அடுக்கை வைத்து மூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.