கன்னியாகுமரி: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பதவி ஏற்ற நாள் முதல் குற்றவாளிகளைக் களையெடுப்பதில் தனிக்கவனம் செலுத்திவருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது துரித நடவடிக்கை எடுத்துவருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு மாதத்திற்குள் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், பெண்கள், குழந்தைகளிடம் தவறாக நடந்தவர்கள் என 12 பேரை அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்.