கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா ஆகஸ்ட் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 8ஆம் நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் தலைமைபதியினுள் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவணி திருவிழாவின் 11ஆம் நாள் திருவிழாவான இன்று (ஆக.31) காலையில் பணிவிடை நடந்தது. பின்னர் அய்யா பல்லக்கு வாகனத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமைப்பதியில் 11ஆம் திருவிழா அதன்பின், கரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டத்திற்கு பதிலாக அய்யா அவங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து அய்யா வைகுண்டசுவாமிக்கு சுருள் படைத்து வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து பல்லக்கு பதியினுள் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு ஏழு மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. கரோனா பாதிப்பின் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே 11ஆம் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயில் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!