தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் 10 மணி நேர சிலம்பம் போட்டி

பெண்கள் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சியாகவும் நாகர்கோவிலில் 10 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் நடைபெற்றது.

சிலம்பம் போட்டி
சிலம்பம் போட்டி

By

Published : Jun 6, 2022, 9:38 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள விளையாட்டரங்கில், நேற்று (ஜூன் 5) பெண்கள் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சியாகவும் 10 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சியாகவும் இந்த போட்டி நடைபெற்றதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

தொடர் 10 மணி நேர சிலம்பம் போட்டி

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை சிலம்பு கலை. சிலம்புகளை ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த காலம் மாறி, தற்போது பாதுகாப்பு கருதி பெண்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பள்ளி மாணவிகள் முதல் பெரிய பெண்கள் வரை சிலம்பாட்டத்தில் தற்போது ஆர்வம் காட்டி வருவதை நாம் பார்க்க முடிகின்றது.

அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இடைவெளியில்லாமல், தொடர்ந்து 10 மணிநேரம் வரையில் நடந்த இந்த சிலம்பம் சுற்றும் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சியாகவும் இந்த போட்டி நடைபெற்றதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். சமீபக் காலங்களாகக் குழந்தைகள் செல்போனில் அதிகம் மூழ்கி தங்களுடைய வாழ்வில் சீரழிவை நோக்கி செல்கின்றனர். எனவே, சிலம்பம் போன்ற பயிற்சிகள் மூலம் அவர்கள் தங்களுடைய கவனத்தை திருப்பி ஆரோக்கியமான சிந்தனை, உடல் நலம், தற்காப்பு ஆகியவற்றிற்காக சிலம்பம் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக சிலம்பு பயிற்றுநர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Radhika Merchant Arangetram: களைகட்டிய மும்பை, அம்பானி மருமகள் பரதநாட்டிய அரங்கேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details