காஞ்சிபுரம் மாருதி நகர் பகுதியில் புதிய குடியிருப்பு பகுதிகள் அதிகரித்துவரும் நிலையில் அங்கு அதிகளவு திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கிடையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளைத் திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பட்டப்பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்கள்! - stealing bicycles CCTV footage released
காஞ்சிபுரம்: பட்டப்பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காட்சியில் குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டவாறே செல்லும் இளைஞர்கள் வீட்டருகே மக்கள் நடமாட்டம் இல்லாததை உணர்ந்து வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடி இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு தப்பி செல்வது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பட்டப்பகலில் எவ்வித அச்சமின்றி இருசக்கர வாகனத்தில் உலாவந்து, வாகன திருட்டில் ஈடுபடும் இளைஞர்களை காவல் துறை கண்காணிக்க வேண்டும். இவர்களால் முதியோர்கள் உட்பட யாருக்கும் விபரீதம் ஏற்படாமல் தடுக்க கடும் நடவடிக்கையை காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என புறநகர் வளர்ச்சி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.