தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா? - Kanchipuram Murder case

காஞ்சிபுரத்தில் 23 வயது இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த தந்தை, மகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 22, 2023, 2:18 PM IST

காஞ்சிபுரத்தில் 23 வயது இளைஞர் படுகொலை - தந்தை, மகன் கைது

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் அமுதன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தமிழ்வாணன்(23) என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவரும் சதாவரம் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்றிரவு (மார்ச்.21) தனது நண்பர் தினகரனை பார்ப்பதற்காக தமிழ்வாணன் இருசக்கர வாகனத்தில் சதாவரம் சென்றதாகத் தெரிகிறது.

இவ்வாறு அவர், சதாவரம் அருகே செல்லும்போது தமிழ்வாணனை வழிமறித்த இருவர் சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தமிழ்வாணன் அலறித் துடிதுடித்துள்ளார். பின்னர், அவரை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்வாணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை சம்பவம் பற்றி தகவலறிந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் தொடர் விசாரணையில், தமிழ்வாணனை வழிமறித்து வெட்டிக் படுகொலை செய்தது காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அவரது தந்தை ரகு ஆகிய இருவர் என்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க:பள்ளியில் அசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் - பெற்றோர் கைது!

இந்த படுகொலையை செய்த குணசேகரன் மற்றும் அவரது தந்தை ரகு ஆகிய இருவரும் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த படுகொலையை செய்து விட்டு தப்பியோடிய குணசேகரனை, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோட முயன்ற குணசேகரனின் தந்தை ரகுவை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்வாணனை, குணசேகரனும் அவரது தந்தையும் இணைந்து வெட்டி படுகொலை செய்ததன் காரணம் என்ன? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர். இரவில் நடந்த இந்த கொடூரமான வெறிச் செயலால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலங்களாக, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் குற்ற செயல்களை போலீசார் கவனித்து, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை விடுத்து உள்ளனர். கள்ள மது விற்பனை மற்றும் தாராளமாகப் புழங்கும் கஞ்சா ஆகியவற்றால், தொடர் குற்றச் செயல்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்டத்தில் ரவுடிகள் மீதான போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் மூதாட்டியை கட்டிப் போட்டு கைவரிசை - நகை, பணம் கொள்ளையடித்த 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details