காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ரோஸ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவருடன், கடந்த ஜூன் 26ஆம் தேதி வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் ஜான்ரோஸை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்தூர் கிராமத்தில் உள்ள புதர்மண்டி பகுதியில் ஜான்ரோஸ் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. பின்னர் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.