காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தெரேசாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல்கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த காவலர்கள் இளைஞரின் உடலை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட தகவலில், உயிரிழந்திருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனியப்பன்(24). அவர் சக நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
சில நாள்களுக்கு முன்பு பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று(ஜன.19) அவர் குடியிருக்கும் அடுக்குமாடியின் முதல் தளத்தில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டதால் யாரும் கவனிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.