தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - women police given driving license

காஞ்சிபுரம்: பெண் காவலர்ளுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா வழங்கி, பெண் காவலர்களை பாராட்டினார்.

women police given driving license for four wheels
women police given driving license for four wheels

By

Published : Dec 20, 2020, 11:32 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பெண் காவலர்களுக்கும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா தொடங்கிவைத்தார். இதையடுத்து முதல் கட்டமாக ஆயுதப்படை மற்றும் தாலுக்கா காவல் நிலையங்களில் பணிபுரியும் 5 பெண் காவலர்களுக்கு ஒரு மாத காலம் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது ஓட்டுநர் பயிற்சி முடித்த பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தன் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து ஓட்டுநர் உரிமம் வழங்கி பாராட்டினார்.

பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்த ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகத்தையும் பாராட்டினார். இதன் பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பெண் காவலர்களுக்கும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓட்டுநர் பயிற்சியாளருக்கு மாரடைப்பு: துரிதமாக செயலாற்றிய பயிற்சி ஓட்டுநர்கள்!

ABOUT THE AUTHOR

...view details