காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மாத்தூர் தனியார் குடியிருப்பில், கம்பத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் 4-வது மாடியில் வசித்து வருகிறார். இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இலக்கியா(33) என்ற மனைவியும், மூன்றரை வயது இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு(பிப்.24) தினேஷ் வீட்டிற்குள் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும், இதனால் தினேஷுக்கும் இலக்கியாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த இலக்கியா, நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.