தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலில் இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக எத்தனை இடம் கொடுத்தது? சீமான் கேள்வி

காஞ்சிபுரம்: முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து இஸ்லாமிய பெண்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டோம் என்று கூறி வரும் பாஜக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு எத்தனை இடங்களை கொடுத்தது என்று நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

சீமான்

By

Published : Aug 25, 2019, 10:16 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், செங்கொடியின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான பொதுகூட்டம் நடைப்பெற்றது. அதில் அக்கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு செங்கொடியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பில் இருந்து இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. தன்னலமற்று செய்வது தான் சேவை, அதற்கும் சேர்த்து எதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டும்? . மேலும் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து இஸ்லாமிய பெண்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டோம் என்று கூறிவரும் பாஜக, நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு எத்தனை இடங்களை கொடுத்தது என்று கேள்வியெழுப்பினார்.

நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பேசும் சீமான்

ABOUT THE AUTHOR

...view details